திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் வடமாநில தொழிலாளர்கள் முகாம் அமைத்து இரும்பு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இரும்பு தொழிலாளிகள் செங்கத்தில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் விவசாயிகளுக்கு தேவையான பல்வேறு வகையான இரும்பு பொருட்கள் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சாலை ஓரம் பட்டறை அமைத்துள்ள அவர்கள், அதிகாலை முதல் இரும்பு தயாரிக்கும் பணிகளில் ஈடுபடுகின்றனர். பழைய இரும்பு துண்டுளை தீயில் நன்கு பழுக்க வைத்து அதிலிருந்து கடப்பாரை, கத்தி, நீல பட்டகத்திகள், கதிர் அருவாள் என விவசாயிகளுக்கு தேவையான பொருட்களை தயாரிக்கின்றனர். பொங்கல் பண்டிகை வருவதால் குறைந்த விலையில் கிடைக்கும் அந்த பொருட்களை விவசாயிகளும், பொதுமக்களும் ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள்.