மத்திய அரசுக்கு இடைக்கால ஈவுத்தொகையாக 40 ஆயிரம் கோடி ரூபாயை ரிசர்வ் வங்கி வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடன் பத்திரங்களின் மூலம் கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதியை ரிசர்வ் வங்கி, மத்திய அரசுக்கு ஈவுத்தொகையாக வழங்கி வருகிறது. நடப்பு நிதியாண்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் இடைக்கால ஈவுத்தொகையாக 40 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசுக்கு, ரிசர்வ் வங்கி வழங்கியது.
இந்நிலையில், வரும் மார்ச் மாதத்திற்குள் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்குள், ஈவுத்தொகை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வருவாய் குறைவு காரணமாக மத்திய அரசுக்கு, நிதி பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில், ரிசர்வ் வங்கி அளிக்கும் ஈவுத்தொகை ஓரளவு உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.