மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில் நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி, வரும் பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெறுகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்களின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். மக்களவை தேர்தலுக்கு முன்பு நடக்கும் இந்த கூட்டத்தொடர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் கடைசி கூட்டத்தொடர் ஆகும். மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளதால் அவருக்கு மாற்றாக இடைக்காலமாக அப்பொறுப்பை கவனிக்கும் ரயில்வே அமைச்சர்,பியூஷ் கோயல், இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரி வரம்பை இரண்டரை லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.