சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கியே இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என கூறினார்.
மேலும் அவர், விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போது கண்டுகொள்ளாத மத்திய அரசு, விவசாயிகள் அதிகம் உள்ள மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் தோல்வி அடைந்த பிறகுதான் 6000 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் அறிவித்துள்ளது எனக் கூறினார்.