இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸை கைது செய்ய இடைக்கால தடை – சென்னை உயர்நீதிமன்றம்

சர்கார் திரைப்பட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸை கைது செய்ய, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக் கோரி சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சர்கார் படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

தமிழகம் முழுவதும் சர்கார் படத்திற்கு எதிரான கருத்துக்கள் பரவலாக கூறப்பட்டு வரும்நிலையில், சில இடங்களில் அப்படத்தின் காலை காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, நேற்று நள்ளிரவில், முருகதாஸின் வீட்டின் கதவு தட்டப்பட்டதாக அவர் புகார் தெரிவித்துள்ளார். மேலும் தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில், தனக்கு முன்ஜாமின் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸை கைது செய்ய இடைக்கால தடை விதித்தனர். நவம்பர் 27-ம் தேதி வரை அவரை கைது செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version