ஈரோடு மாவட்டம் ஊராட்சிக்கோட்டையில் உள்ள கதவணை நீர் மின் நிலையத்தில் உடைந்த மதகை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
காவிரி ஆற்றில் இப்பகுதியை சுற்றியுள்ள இடங்களில் கதவணை நீர் மின் நிலையங்கள் உள்ளன. இங்கு, தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு தலா 15 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் ஊராட்சிக்கோட்டை கதவணை மின் நிலையத்தில் 10 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் ஆற்றில் நீரின் வேகத்தில் 17வது எண் இரும்பு கதவில் உடைந்தது. சுமார் 50 மீட்டர் தொலைவுக்கு கதவு இழுத்துச் செல்லப்பட்டது. தேக்கி வைக்கப்பட்டிருந்த 1.5 டி.எம்.சி தண்ணீர் பெருக்கெடுத்து வெளியேறியது. இதனையடுத்து நீர்மின் நிலைய ஊழியர்கள் அபாயச் சங்கை குறித்து எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து உடைந்த கதவை சரி செய்யும் பணியை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.