4 வெற்றிகளை பெற்ற ஆஸ்திரேலியா ஹாட்ரிக் வெற்றி பெற தீவிரம்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணியுடனான 26 வது லீக் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் 26 வது லீக் போட்டியில், ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, முஷ்ஃபிகுர் ரஹிம் தலைமையிலான வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலியா அணி, இந்தியாவிடம் மட்டும் தோல்வியடைந்த நிலையில், 4 போட்டிகளில் வெற்றி பெற்று வலுவான அணியாக உள்ளது. அதேபோல், 5 போட்டிகளில் விளையாடியுள்ள வங்கதேசம், 2 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும், கண்ட நிலையில், ஒரு போட்டி மழையால் ரத்தானது. இந்நிலையில், நாட்டிங்காமில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் ஃபின்ச் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

Exit mobile version