பொள்ளாச்சியை அடுத்த அர்த்தநாரி பாளையம் பகுதியில், காட்டு யானையான அரிசி ராஜா தஞ்சம் அடைந்துள்ளது. இந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பொள்ளாச்சியை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைத்துள்ள அர்த்தநாரிபாளையம் கிராமத்தில், கடந்த சில நாட்களாகவே காட்டுயானை அட்டகாசம் செய்துவருகிறது.
இந்த பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துவதோடு, விவசாயிகளையும் அச்சுறுத்தி வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் அர்தனாரி பாளையம் பகுதியில் உள்ள ராதாகிருஷ்ணன் என்பவரது தோட்டத்தில் புகுந்த அரிசி ராஜா, அங்கு பயிடப்பட்டுள்ள தென்னை மரங்களை சேதப்படுத்தியதோடு, விரட்டச் சென்ற ராதாகிருஷ்ணனனையும் அடித்துக் கொன்றது. இதையடுத்து, இரு தினங்களாக யானையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த காட்டு யானை தற்போது குண்டுருட்டி பள்ளம் வனப்பகுதியில் தஞ்சம் புகுந்துள்ளதை அறிந்த வனத்துறையினர், அதற்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.