பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் மண்பானை தயாரிக்கும் பணி மும்முரம் அடைந்துள்ளது.
செஞ்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட மக்கள் நகர் கிராமத்தில் பொங்கல் பானைகளை வாங்கிச் செல்வது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டும் மக்கள் பானை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருவதால், தொழிலாளர்கள் அதிகளவில் மண்பானைகளை தயாரித்து வருகின்றனர். பானையின் அளவிற்கு ஏற்றார் போல், 40 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.