சென்னை எண்ணூர் துறைமுகத்தில் எண்ணெய் கசிவு கடலில் கலந்ததால் அகற்றும் பணி தீவிரம்

சென்னை எண்ணூர் துறைமுகத்தில் கடலில் கசிந்த 2 டன் எண்ணெய்யை அகற்றும் பணி 2-வது நாளாக நடைபெற்று வருகிறது.

மேற்கு வளைகுடா நாடான மார்ஷல் தீவுக்கு சொந்தமான ‘கோரல் ஸ்டார்’ என்ற கப்பல் 25 ஆயிரத்து 400 டன் கச்சா எண்ணெய் ஏற்றிகொண்டு சென்னையை அடுத்த மீஞ்சூரில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு வந்தது. பின்னர் கப்பலில் இருந்து கச்சா எண்ணெய்யை துறைமுக இணைப்பு குழாய் மூலம் அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது குழாயில் ஏற்பட்ட உடைப்பால், எண்ணெய் கசியத் தொடங்கியது. சுமார் 2 டன் கச்சா எண்ணெய் கடலில் கலந்துள்ளது. இவற்றை அகற்றும் பணியில் துறைமுக ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 2வது நாளாக இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எண்ணெய் படலங்களை உறிஞ்சும் கருவிகள் மற்றும் ஸ்கிம்மர்கள் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

 

Exit mobile version