நீலகிரில் இயற்கை முறையிலான சோப்பு தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் குரும்பாடி, புதுக்காடு, வடுகன் தோட்டம் பகுதிகளில் இயற்கை முறையில் சோப்பு தயாரிக்கும் பணியில் பழங்குடியின பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். உடலுக்கு தீங்கினை ஏற்படுத்தும் ராசாயணப் பொருட்கள் இல்லாமல் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் டையை பயன்படுத்தி சோப்பு தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் அரசு தலையிட்டு போதிய உதவிகள் செய்தால் இயற்கை முறையிலான இந்த சோப்பு தயாரிப்பிற்கு மேலும் வலுக்கூடும் என சோப்பு தயாரிக்கும் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.