விவிபேட் இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி தீவிரம்

தேர்தலையொட்டி சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் விவிபேட் இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வாக்கு எந்திரத்தின் உண்மைத்தன்மையை உறுதிபடுத்தும் வகையில் முதன் முறையாக வி.வி.பேட் இயந்திரம் இந்த தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளருக்கு உறுதிபடுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி முதல்கட்டமாக துவங்கியுள்ளது.

முன்னதாக விவிபேட் இயந்திரத்தில் அச்சுதாள் மற்றும், வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் பதிவேற்றப்பட்டு மின்னணு வாக்குபதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்த பிறகே இயந்திரத்தில் சின்னம் ஒட்டும் பணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version