சேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செங்கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்

சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொங்கலை முன்னிட்டு செங்கரும்பு அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சங்ககிரி, செட்டிப்பட்டி, தேவூர், குள்ளம்பட்டி உட்பட அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் செங்கரும்புகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டை விட பருவமழையாலும், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீராலும் கரும்பு விளைச்சல் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் அரசின் பொங்கல் பரிசு திட்டத்திற்காக நேரடி கொள்முதலாலும், வியாபாரிகளின் வருகை அதிகரித்ததாலும் அதிக லாபம் கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். 20 கரும்பு கொண்ட ஒரு கட்டு 500 ரூபாய் வரை விலைப்போவதாகவும், இதனால் இந்தாண்டுப் பொங்கலை சிறப்பாக கொண்டாடவுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version