தமிழக அரசின் சார்பில் பொதுமக்களுக்குப் பொங்கல் பரிசு வழங்கப் பைகள் தைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
ஆண்டுதோறும் தை முதல் நாள் பொங்கலைக் கொண்டாடும் வகையில் தமிழக அரசு பொதுமக்களுக்குப் பொங்கல் பரிசு வழங்குவது வழக்கம். பொங்கல் பரிசில் பச்சரிசி, ஏலக்காய், முந்திரிப் பருப்பு, திராட்சை, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் இருக்கும். தற்போது தமிழக அரசு நெகிழிப் பைகளுக்குத் தடை விதித்துள்ள காரணத்தால் துணியிலான பைகள் தைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படங்கள் பொறிக்கப்படாமல், வெள்ளைப் பைகளைத் தைக்கும் பணி நாமக்கல்லில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 5 ஆயிரம் பெண் தொழிலாளர்களும், 2 ஆயிரம் ஆண் தொழிலாளர்களும் பைகள் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.