பொங்கல் பண்டிகைக்காக உருட்டு வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் கரும்பு விளைச்சல் அதிகரித்துள்ளதால் வரும் பொங்கல் பண்டிகைக்கு உருட்டு வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் குடிமராமத்து பணிகள் நடைபெற்றதால், பருவமழையின் காரணமாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் பகுதியில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து குளங்கள்,கண்மாய்களில் நீர் பெருகியுள்ளன. இதனால் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் கரும்பு விளைச்சல் அதிகரித்துள்ளதால், மகிழ்ச்சி அடைந்ததுள்ள விவசாயிகள், அதிலிருந்து பொங்கல் பண்டிகைக்காக உருட்டு வெல்லம் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இங்கு தயார் செய்யப்படும் உருட்டு வெல்லம், வெளிமாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெல்லம் 40 முதல் 45 ரூபாய் வரை விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version