மழைக்கால காய்ச்சல் பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: பீலா ராஜேஷ்

மழை காலங்களில் ஏற்படும் காய்ச்சல் பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

சேலம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அவர், மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளிடம் கலந்துரையாடினார். பின்னர் மழை காலங்களில் ஏற்படும் காய்ச்சல் பாதிப்புகளை தடுப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இதில் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ், தமிழகத்தில் 2 ஆயிரம் சிகிச்சை மையங்களில் காய்ச்சல் பாதிப்பு குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மழை காலங்களில் ஏற்படும் காய்ச்சல் பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version