சிவகாசியில் 2020 ஆம் ஆண்டிற்கான தினசரி நாட்காட்டி தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டு மும்மரமாக நடைபெற்று வருகிறது.
அச்சகத் தொழிலில் சிறந்து விளங்கும் சிவகாசியில் நாட்காட்டி தயாரிப்பு முக்கியப் பங்கு வகுக்கிறது. இங்குத் தயாரிக்கப்படும் நாட்காட்டி மை, காகிதம் மற்றும் டை கட்டிங் ஆகியவற்றின் தரத்தால் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில் 2020 ஆம் ஆண்டிற்கான தினசரி நாட்காட்டி தயாரிக்கும் பணி சில நாட்களுக்கு முன் தொடங்கித் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. சிவகாசியில் தயாரிக்கப்படும் நாட்காட்டிகள் பல்வேறு மொழிகளில் அச்சடிக்கப்பட்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுவதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். மூலப்பொருட்களின் விலை உயர்வாலும், ஜிஎஸ்டி வரி போன்றவற்றின் காரணமாகவும் 2020 ஆம் ஆண்டின் நாட்காட்டி விலை 15% வரை அதிகரித்துள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.