பழனி முருகன் கோவிலில் தைப்பூச விழாவிற்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்களின் வசதிக்காக, தற்காலிக தங்கும் இடங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உலகப் புகழ் பெற்ற பழனி முருகன் கோயிலில் ஆண்டு தோறும் தை மாதத்தில் தைப்பூச விழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான தைப்பூச விழா பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தைப்பூச விழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள், பாத யாத்திரையாக பழனி கோயிலுக்கு செல்வது வழக்கம். ஒட்டன்சத்திரம் வழியாக பாத யாத்திரையாக பழனி கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக தற்காலிக தங்கும் இடங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பழனி கோவில் நிர்வாகம் சார்பில் காமாட்சியம்மன் கோவில், காவல் நிலையம், குழந்தை வேலப்பர் கோவில் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் தங்கும் இடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.