உதகை அருகே பொக்காபுரம் மாரியம்மன் கோயில் திருவிழாவில் குவிந்த பிளாஸ்டிக் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்தில் பொக்காபுரம் மாரியம்மன் தேர்த்திருவிழா கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற நிலையில் பல்வேறு ஊர்களிலிருந்தும் ஏராளமான மக்கள் வருகை தந்தனர். இதனால் இப்பகுதயில் ஏராளமான பிளாஸ்டிக் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் குவிந்தன. இவற்றை அப்புறப்படுத்தும் பணியில் அப்பகுதி மலைவாழ் மக்கள் ஈடுபட்டுள்ளனர். சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் குப்பைகள் அகற்றும் பணிகள் மலைவாழ் மக்கள் உதவியுடன் தீவிரமாக நடைபெற்று வருவதாக அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பலகைகள் வைக்கப்பட திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.