இந்திய பங்கு சந்தைகளில் இரண்டாவது நாளாக சரிவு நீடித்து வருவதால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்
இன்று காலை, மும்பை பங்கு சந்தையில் 209 புள்ளிகள் குறைந்து 38 ஆயிரத்து 507 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை72 புள்ளிகள் குறைந்து 11 ஆயிரத்து 485 புள்ளிகளிலும் நிலை கொண்டுள்ளன. திங்கள் கிழமை மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 792 புள்ளிகள் சரிவடைந்த நிலையில் இரண்டாவது நாளாக சரிவு நீடிக்கிறது. லாப நோக்கம் கருதி பங்குகளை அதிகளவு முதலீட்டாளர்கள் விற்பதால் சரிவு ஏற்பட்டு வருவதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் சர்வதேச சந்தைகளில் காணப்படும் மந்த நிலை இந்திய சந்தைகளில் எதிரொலிப்பதால் சரிவுகள் நீடித்து வருகின்றன.