ஓசூரில் குடைமிளகாய் ஏற்றுமதியால் விவசாயிகளின் வருவாய் அதிகரிப்பு

ஓசூரில் குடைமிளகாய் ஏற்றுமதி அதிகரிப்பு நல்ல விலைக் கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதிகளில், 800 ஹெக்டேர் நிலப்பரப்பில் பசுமைக்குடில்கள் அமைத்து, பூக்கள் மற்றும் குடைமிளகாய் உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு முதல் வெளி மாநிலங்கள் மட்டுமல்லாது, துபாய், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் குடைமிளகாய் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

ஒரு ஏக்கர் நிலப்பரப்பில், 3 டன் மிளகாய் அறுவடை செய்யப்பட்டு, கிலோ 150 ரூபாய் வரை விவாசயிகளிடமே கொள்முதல் செய்யப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version