வருமான வரித்துறை சார்பில் 24 மணி நேரமும் செயல்படும்

மக்களவை தேர்தலையொட்டி வருமான வரித்துறை சார்பில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாடு அறை திறக்கப்பட்டுள்ளது

வருமான வரித்துறை இணை இயக்குனரும், தேர்தல் செலவு கண்காணிப்பு அதிகாரியுமான முரளிமோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கணக்கில் காட்டப்படாத பணம் பயன்படுத்தப்படுவதை கண்டுபிடித்து, பறிமுதல் செய்வதற்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகளை வருமான வரி புலனாய்வு இயக்குனரகம் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரி புலனாய்வு இயக்குனரகம் சார்பில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை வருமான வரித்துறை அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். யாரேனும் அதிகப்படியான தொகை அல்லது விலை உயர்ந்த பொருட்கள் வைத்திருந்தாலோ, ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு அதனை கொண்டு சென்றாலோ தகவல் தெரிவிக்க வருமான வரித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Exit mobile version