2017 – 2018 நிதியாண்டிற்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாதவர்கள், நாளையில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் வரியை செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆண்டு வருமானம் ஐந்து லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள், கடந்த 2017-2018 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி தேதி, கடந்த ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதற்கு மேல் தாக்கல் செய்பவர்களுக்கு இன்று மாலை வரை, 5 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் கட்ட அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இது தவறும் பட்சத்தில், நாளை முதல் மார்ச் 31 வரை, 10 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் வரியை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கு கீழ் உள்ளவர்கள், மார்ச் 31 ஆம் தேதிக்குள், ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.