ஸ்பெயின் நாட்டில் காடீஸில் நகரத்திலுள்ள புல்வெளி ஒன்றில் இரண்டு வரிக்குதிரைகள் நின்றிருந்தன. சரணாலயத்தில் அல்லது காட்டிலோ இருக்க வேண்டியவை சம்பந்தமில்லாமல் நகருக்குள் நிற்பதை பார்த்த அந்த பகுதி மக்கள் அதன் அருகில் சென்று பார்த்தப்போது கிட்டத்தட்ட மயக்கம் வராத குறைதான். கழுதைக்கு யாரோ பெயிண்ட் அடித்து வரிக்குதிரையாக மாற்றியிருந்தனர். இந்த நிகழ்வு உடனே விலங்குகள் நல அமைப்பிற்கு புகாராக சென்றதையடுத்து அதிகாரிகள் விசாரணையில் இறங்கினர்.
விசாரணையில் அந்த நகரில் நடக்கும் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக “காட்டில் திருமணம் நடப்பது போல” அலங்காரம் செய்யப்பட்டிருந்ததாகவும், அங்கு நிற்க வைக்க காட்டு விலங்குகள் கிடைக்காததால் கழுதைக்கு பெயிண்ட் அடித்து நிற்க வைத்ததாகவும் தெரிய வந்துள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது