நாயை கட்டி அணைத்து புகைப்படம் எடுக்க முயன்ற இளம்பெண்ணிற்கு நடந்த விபரிதம்…யார் அந்த இளம்பெண் அப்படி என்ன விபரிதம் நடந்தது , விளக்குகிறது இந்த சிறப்பு தொகுப்பு…
அர்ஜென்டினாவில் புகைப்படம் எடுக்க முயன்ற இளம் பெண்ணை, நாய் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜென்டினா அருகே உள்ள டுகுமனைச் சேர்ந்தவர் 17 வயதான லாரா ஜான்சன் என்ற இளம்பெண்.இவர் நாயுடன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு எதர்பாராத பின்விளைவை சந்தித்துள்ளார்.
லாரா ஜான்சன், தனது நண்பரின் செல்லப்பிராணியான கென்னை என்ற ஜெர்மன் ஷெப்பர்ட் நாயினை கட்டியணைத்த படி புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டுள்ளார்.
பின்னர் ஷெப்பர்ட் நாயிடம் புகைப்படம் எடுக்க முயன்றபோது, நாயானது மிகுந்த கோபத்திற்க்குள்ளானது, ஆனால் லாரா இதனை பொருட்படுத்தாமல் செல்பி எடுக்க முயன்றுள்ளார்.
இதில் கடுப்பான ஷெப்பர்ட் நாய், லாராவின் முகத்தை கடித்து குதறியுள்ளது.பின்னர் முகத்தின் இருபக்கத்திலும் படுகாயமடைந்த லாரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு சுமார் இரண்டு மணிநேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு முகத்தில் 40 தையல்கள் போடப்பட்டுள்ளது.இதில் படுகாயமடைந்த லாரா, கென்னை எதுவும் செய்ய வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் இச்சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை லாரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.