இந்தியாவுக்கான சிறப்பு வர்த்தக அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டு இருப்பதால், 3.6 லட்சம் கோடி அளவுக்கு வரிச் சலுகை இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு இந்தியா 100 முதல் 150 சதவீதம் வரை வரி விதித்து வருகிறது. இதனால், அதிருப்தியில் ஆழ்ந்துள்ள அதிபர் டிரம்ப், இந்தியாவுக்கான சிறப்பு வர்த்தக அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. இது தொடர்பாக அவர் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். அதிபர் டிரம்பின் இந்த நடவடிக்கையால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு வரிச்சலுகை ரத்தாகும் அபாயம் எழுந்துள்ளது. இதனால், இந்தியாவுக்கு 3.6 லட்சம் கோடி அளவுக்கு வரிச் சலுகை இழப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வல்லுனர்கள் கணித்துள்ளனர்.