வாக்குரிமையின் அவசியத்தை எடுத்துரைத்து சாதனை

வாக்குரிமையின் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில், சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர், தொடர்ந்து 14 மணி நேரம் வாக்குரிமை பற்றி எடுத்துரைத்து சாதனைப் படைத்துள்ளார்

சென்னை அண்ணாநகரை சேர்ந்த இளைஞர்கள், பல்வேறு துறையில் தனது திறமையை வெளிப்படுத்தி சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.. மதன்குமார் என்பவர், ஸ்பிரிங் பலுன் நடனம் என்ற பிரிவில் ஒரு மணி நேரம் நடனம் ஆடி அசத்தினார். அதே போல மிமிக்கிரி மற்றும் வீடியோ ஜாக்கியான சென்னையை சேர்ந்த சதீஷ் குமார், வாக்குரிமையின் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில்,தொடர்ந்து 14 மணி நேரம் வாக்குரிமை பற்றி எடுத்துரைத்து, சாதனைப்ப டைத்துள்ளார். இந்த சாதனைகள் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

Exit mobile version