ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பூங்காக்களுக்கு அதிக முக்கியத்துவம் – சட்டப்பேரவையில் அமைச்சர் வேலுமணி தகவல்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பூங்காக்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ. கே.என். நேருவின் கேள்விக்கு பதிலளித்த அவர், ஸ்மார்ட் சிட்டி திட்டம் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.

திருச்சி மாவட்டத்தில் குடிநீர் கலங்கலாக வருவது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Exit mobile version