அம்பன் புயல் கரையை கடந்தபின் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்!

அம்பன் புயல் கரையை கடந்த பின் தமிழகத்தில் 2,3 நாட்கள் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அம்பன் புயலால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. தற்போது ஆம்பன் புயல் வடக்கு நோக்கி நகர்ந்ததால் இன்று முதல் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கிய கத்தரி வெயில் வரும் 28-ம் தேதி நிறைவடையவுள்ள நிலையில், சென்னை உட்பட தமிழகத்தின் 6 இடங்களில் நேற்று  40 டிகிரி செல்சியஸூக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. 2020 ஆம் ஆண்டு தொடங்கிய பின் சென்னையில் நேற்று அதிகபட்சமாக 41 புள்ளி 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 41 புள்ளி 4 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாக்கம், வேலூர் மற்றும் திருத்தணி ஆகிய இடங்களில் 41 புள்ளி 3 டிகிரி செல்சியஸும் வெப்பம் பதிவாகியிருந்தது.

Exit mobile version