கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. இதன்காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்து வந்தது. அனல் காற்றும் வீசியதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வங்கக் கடலின் உருவான ஆம்பன் புயல், ஈரப்பதத்தை இழுத்து சென்றதால், தமிழக கடலோர மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரித்தது. கரூர், சேலம், மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டி வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில், அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைவதால், படிப்பாடியாக வெயிலின் தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.