தமிழகத்தில் அடுத்த மூன்று தினங்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் அனல் காற்று வீசும் என்றும் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை அதிகரித்து காணப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது