குடும்ப சண்டையை தடுக்கச் சென்ற நபரை கணவன் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் எரவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்த மாதவன் என்பவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகே செந்தில் – பாக்கியலட்சுமி தம்பதினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் ஆகி ஓராண்டை கடந்த நிலையில், அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், செந்தில் குடிபோதையில் அவரது மனைவியை தாக்கியுள்ளார். இதை பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்த மாதவன் மற்றும் அக்கம்பக்கத்தினர் தடுத்துள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த செந்தில், மாதவனை காலில் கடித்து குதறி கீழே தள்ளியுள்ளார். இதில் காயமடைந்த மாதவன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். குடும்ப சண்டையை தடுக்க சென்ற நபரை கணவன் கடித்து குதறிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.