ராஜஸ்தானில் ஓய்வுப்பெற்ற பள்ளி ஆசிரியர் தனது மனைவியின் ஆசைக்காக ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து அழைத்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் பகுதியை சேர்ந்த ரமேஷ் மற்றும் மனைவி மீனா ஆகியோரும் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றனர்.இந்த நிலையில் ரமேஷின் 34 ஆண்டுகள் பணிக்காலம் முடிந்ததற்காக அவரின் பள்ளியில் ஓய்வு விழா நடைப்பெற்றது. பணிக்காலம் முடிந்தவுடன் கொடுக்கப்படும் ஓய்வு ஊதியத்தை எடுத்துக் கொண்டு டெல்லியில் ஹெலிகாப்டர் ஒன்றை 4 லட்சம் ரூபாய்க்கு ரமேஷ் வாடகைக்கு எடுத்துள்ளார் .
பள்ளியிலிருந்து ஓய்வு பெறும் விழா முடிந்தவுடன் அந்த ஹெலிகாப்டரில் ரமேஷ் தனது மனைவியுடன் 22 கி.மீ தொலைவில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார் . தனது வாழ்நாள் ஆசை ஹெலிகாப்டரில் செல்வது தான் என்று மனைவி கூறியதை ரமேஷ் நடைமுறையில் நடத்திக் காட்டி உள்ளார் .இது ஒரு வித்தியாசமான retirement journey-யாக இருப்பது அப்பகுதி மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.