ஹாங்காங்கில் சீனாவுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கைதிகளை ஹாங்காங்கில் இருந்து சீனாவுக்கு நாடு கடத்தும் வகையில் சீனா சட்டத்திருத்தம் செய்துள்ளது. இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங், 1997 ம் ஆண்டு முதல் சீனாவின் நிர்வாக பகுதியாக மாற்றம் செய்யப்பட்டது. இதற்கிடையே கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக இங்கிலாந்து உள்ளிட்ட 20 நாடுகளுடன் ஹாங்காங் ஒப்பந்தம் செய்துள்ளது. சீனாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளாத நிலையில் சீன அரசிற்கு ஆதரவான ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லாம் என்பவர் இச்சட்டத்தினை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளார். ஆனால் சீனாவில் நீதி பரிபாலனத்தில் குறைபாடுகள் இருப்பதால் இச்சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதற்கிடையே இச்சட்டத்தினை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை என கேரி லாம் தெரிவித்துள்ளார்.