கச்சத்தீவு திருவிழாவுக்கு 80 படகுகளில் தமிழக பக்தர்கள் 2 ஆயிரத்து 253 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இன்று மாலை கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. பின்னர், சிலுவைப்பாதை வழிபாடு சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து நாளை காலை திருத்தேர் பவனி மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
திருவிழாவில் பங்கேற்பதற்காக தமிழகத்திலிருந்து 80 விசைப் படகுகள் மற்றும் 15 நாட்டுப்படகுகளில் 2 ஆயிரத்து 253 பேர் புறப்பட்டுச் சென்றனர். ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து அனுமதி உறுதி செய்யப்பட்டு, பாதுகாப்புடன் புறப்பட்டனர். கச்சத் தீவில் இருந்து திருவிழா முடிந்த பின்னர் அங்கிருந்து புறப்பட்டு 16ஆம் தேதி மாலை ராமேஸ்வரம் துறைமுகத்தை வந்தடைகின்றனர்.