சின்னத்தம்பி மீண்டும் வர வேண்டி பூஜைகள் செய்யும் மலைவாழ் மக்கள்

கோவை மாவட்டம் ஆனைக் கட்டி மலைக் கிராமத்தில் யானைகளுக்கென தனி கோவிலை கட்டி, சின்னத்தம்பி மீண்டும் வர வேண்டி மக்கள் வழிபட்டு வருகின்றனர். இதுபற்றிய ஒரு செய்து தொகுப்பை தற்பொது பார்க்கலாம்.

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஆனைக்கட்டி, தூமனூர், பனப்பள்ளி, உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வாழ்ந்து வருகின்றன. இவைகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து விவசாய பூமிகளில் பயிரிடப்பட்டுள்ள சோளம், தென்னை, வாழை உள்ளிட்ட பயிர் வகைகளை தின்று சேதப்படுத்தி வருவது, இன்று நேற்று அல்ல, பல வருடங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது என்கிறார், ஆனைக்கட்டி மலைப்பகுதியில் யானைகளுக்காக கோவில் கட்டியுள்ள, பழங்குடியினத்தவரான பதுவன். 76 வயதான பதுவன் யானைகளுக்காக கட்டியுள்ள கோவிலில் தினமும் வழிபாடு செய்து வருகிறார்.

கடந்த 4 தலைமுறைகளாக யானைகளுக்கு கோவில் கட்டி வழிபடும் அப்பகுதி மக்கள் தினமும் இங்கு வந்து வழிபட்டு பூஜைகளை செய்து வருகின்றனர். வருடத்திற்கு ஒருமுறை, புரட்டாசி மாதத்தில் நிலத்தில் விளைந்த பயிர்களை வைத்து பூஜை செய்வார்களாம். யானைகளின் கால் தடத்தில் தங்களால் முடிந்த சில்லறைகளை வைத்து அதை பூஜை செய்து ஒரு துணியில் கட்டி வயல்களில் மாட்டினால், யானைகள் விவசாய நிலத்தில் நுழையாது என்பது இவர்களின் நம்பிக்கையாக உள்ளது.

யானையை ராஜா என்றுதான் அழைப்பதாக கூறும் இவர்கள் விளைநிலங்களுள் நுழையும்போது போய்டு ராஜான்னு கையெடுத்து கும்பிட்டா போய்விடும் சின்னத்தம்பியை பட்டாசு வெடித்து விரட்டுவது, கல் எறிவது போன்ற செயல்கள் கோபத்தைதான் ஏற்படுத்தும் என்கிறார்.ராஜாவை போல சுற்றித்திரிந்து கொண்டிருந்த சின்னத்தம்பியை கூண்டில் அடைக்காமல் சுதந்திரமாக வாழவிடுங்கள் என்பதே இம்மலைகிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Exit mobile version