உதகை மலை ரயிலின் 111-வது பிறந்த நாள் விழா

யுனஸ்கோ அங்கிகாரம் பெற்ற குன்னூர் – உதகை மலை ரயிலின் 111-வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1908ம் ஆண்டு உதகை மலை ரயில் முதன் முதலாக இயக்கப்பட்டது. 46 புள்ளி 61 கிலோ மீட்டர் தூரம் உள்ள மலை ரயில் பாதையில் 212 வளைவுகள், 16 குகைகள், 31 பெரிய பாலங்கள், 219 சிறிய பாலங்கள் உள்ளன. கடந்த 2005-ம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் நூற்றாண்டு பழமை வாய்ந்த உதகை மலை ரயில் மற்றும் குன்னூர் – உதகை நிலையங்களை பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.

இந்நிலையில், குன்னூர் – உதகை இடையே மலை ரயில் போக்குவரத்து துவங்கி இன்றுடன் 111 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி, நடைபெற்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ரயிலில் பயணிக்க வந்த பயணிகளுக்கு பூங்கொத்து அளித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. உதகை ரயில் நிலையத்தில் கேக் வெட்டி சுற்றுலா பயணிகளுடன் ரயில்வே பணியாளர்கள் விழாவை கொண்டாடினர்.

மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை இயக்கப்படும் நீராவி எஞ்சினை உதகை வரை இயக்க வேண்டுமென இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Exit mobile version