கர்ப்பிணிப் பெண் எச்.ஐ.வி தொற்று விவகாரம் : தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது உயர்நீதிமன்றம்

கர்ப்பிணிப் பெண்ணிற்கு எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் போது, செலுத்தப்பட்ட ரத்தத்தில், எச்.ஐ.வி தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில், மூன்று மருத்துவமனை பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு ஜனவரி 3 க்குள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, கர்ப்பிணிப் பெண் தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Exit mobile version