தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்யும் முன்பு, மத்திய அரசிடம் ஆலோசனை நடத்தப்பட்டதா என்று தேர்தல் ஆணையத்திடம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

திருவாரூரில் அறிவிக்கப்பட்ட தேர்தலை ரத்து செய்ய, தலைமை தேர்தல் ஆணையருக்கு அதிகாரம் இல்லை என்று, திருமங்கலத்தை சேர்ந்த தாமோதரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதன் விசாரணையில், கஜா புயல் நிவாரண பணிகள் நடைபெறுவதாக, அரசியல் கட்சியினர் கூறியதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இடைத்தேர்தலை ரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இருப்பதாக குறிப்பிட்ட நீதிமன்றம், ஆனால், மத்திய அரசிடம் ஆலோசிக்கப்பட்டு, அனுமதி பெறப்பட்டதா? என்று கேள்வி எழுப்பியது. இதுபற்றி, வரும் 30 ஆம் தேதி தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version