டிராஃபிக்கில் இருந்து தப்பிக்க மினி ஹெலிகாப்டரை உருவாக்கிய வாலிபர்

சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களை போலவே கிராமப்புறம் வரை போக்குவரத்து நெரிசல் என்பது சகஜமான ஒன்றாக மாறிவிட்டது. அதுவும் வேலைக்கு செல்பவர்கள், அவரசமாக பயணம் செய்பவர்கள் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டால் அவர்கள் பாடு திண்டாட்டம் தான். இதற்கு அருமையான முடிவு ஒன்றை வாலிபர் ஒருவர் எடுத்துள்ளார்.

இந்தோனேஷியாவை சேர்ந்த ஜூஜூன் ஜூனேடி என்ற வாலிபர் தினமும் போக்குவரத்து நெரிசலால் நொந்துபோய் விட்டார்.அதன்படி தன்னுடைய ஓய்வு நேரங்களை செலவிட்டு யுடியூப்களில் பல டுடோரியல் வீடியோக்களை பார்த்து, பழைய கடைகளில் இருந்து உதிரி பாகங்களை பெற்று கிட்டதட்ட18 மாத கடின உழைப்பில் ரூ.1.52 லட்சம் செலவில் மினி ஹெலிகாப்டர் ஒன்றை உருவாக்கிவிட்டார்.

சுமார் 26 அடி நீளமுள்ள, பெட்ரோல் கொண்டு இயங்கும் மினி ஹெலிகாப்டரை தயாரிக்க ஜூனேடியின் மகனும், அவனது நண்பனும் தான் அவருக்கு உதவியுள்ளனர். ஆனால் ஹெலிகாப்டரின் சோதனை முயற்சி இன்னும் நடக்கவில்லை. எனினும் சொந்தமாக விமானம் வாங்கலாம என பலருக்கும் தோன்றும் . ஆனால் செயல்முறை செய்து பார்த்த ஜூஜூன் ஜூனேடியை ஏராளமானோர் பாராட்டியுள்ளனர்.

Exit mobile version