காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் குளிர்காலத்தில் 40 நாட்கள் மிக கடுமையான பனிபொழிவு நிகழ்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கடுமையான குளிர், காஷ்மீர் மக்களை வாட்டி வருகிறது. ஸ்ரீ நகர், குல்மார்க் போன்ற பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக வீடுகள் மற்றும் மரங்கள் பனியினால் மூடப்பட்டுள்ளன. குல்மார்க்கில் புத்தம் புதிய பனி பொழிவது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கிறது. அதே நேரம் பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் கார்கில் பகுதியில் மைனஸ் 17 டிகிரியாக வெப்பநிலை குறைந்துள்ளது. லே பகுதியில் மைனஸ் 12 புள்ளி 4 டிகிரி வெப்பநிலை நிலவுகிறது.