கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக மாலை வேளைகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் 6-வது நாளாக நேற்று மதியம் திடீரென காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை காரணமாக, அப்பர்லேக் வியூ, குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்ட பல இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கன மழை பெய்து வருவதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் பகுதி மக்கள் கூறுகின்றனர்.