கன்னியாகுமரியில், கடல் சீற்றத்தால் படகுகள் தூக்கி வீசப்பட்டு கடும் சேதமடைந்துள்ளன.
பள்ளம் கிராமத்தில் கடல் கொந்தளிப்பாகவும், சீற்றத்துடனும் காணப்படுகிறது. கடல் சீற்றம் காரணமாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் புரட்டிப் போடப்பட்டன. 15க்கும் மேற்பட்ட படகுகள் கடலில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமாகின. 6 படகுகள் உடைந்து சேதமாகி உள்ளன. கடலில், தத்தளித்துக் கொண்டிருந்த படகுகளை மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். கடல் சீற்றத்தால் ஊருக்குள் தண்ணீர் புகுந்து விடும் அச்சம் மீனவர்களிடையே ஏற்பட்டிருக்கிறது.