தமிழகத்தின் தெற்கு மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தின் தெற்கு மற்றும் வடக்கு உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் அடுத்த மூன்று தினங்களுக்கு இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனல் காற்றின் தாக்கம் குறைந்து காணப்படும் என்றும், உள் மாவட்டங்களில் வழக்கத்தை விட 3 முதல் 4 டிகிரி வெப்பநிலை அதிகரித்து காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பேச்சிப்பாறை, மரண்டலூர், கீரனூர் உள்ளிட்ட இடங்களில் 3சென்டி மீட்டர் மழையும், ஓசூரில் 2 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 38டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.