தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கரூர், திருச்சி, சேலம், பெரம்பலூர், வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு உள் மற்றும் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, நெல்லை, கோவை ஆகிய 14 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் குமரி முதல் மன்னார் வளைகுடா பகுதியில் 35 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Exit mobile version