வேதா இல்லத்தை அரசுடமையாக்க தீபா, தீபக் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைப்பு!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா இல்லத்தை 68 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தி தமிழக அரசு அரசுடமையாக்கியது. அதை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீபக் தரப்பிலும், இழப்பீடு நிர்ணயித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தீபா தரப்பிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த இரண்டு வழக்குகளும் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது. தீபக் தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தீபா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டதோடு, வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது அரசின் கொள்கை முடிவு எனவும், இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவுப்படி பாதுகாப்பு கோரி தீபா, தீபக் ஆகியோர் டிஜிபியை அணுகவில்லை எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தீபா தக்கல் செய்த வழக்கு பட்டியலிடப்பட்ட பிறகு இரண்டு வழக்குகளையும் சேர்த்து அடுத்த வாரத்தில் விசாரிக்கலாம் என தெரிவித்து, நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

 

Exit mobile version