அரசு பள்ளியில் தலைமை ஆசிரியை மீது தாக்குதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, அரசு பள்ளியில் தலைமை ஆசிரியரை தாக்கி நகைப் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஓசூர் அருகே நாகசந்திரம் அரசு துவக்கப் பள்ளியில் திடீரென புகுந்த முகமூடி கொள்ளையர்கள் 2 பேர், தலைமை ஆசிரியை கஜலட்சுமி என்பவரை கடுமையாக தாக்கினர். அவரை கத்தியால் வெட்ட முயன்றனர். பின்னர் அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்க நகையை பறித்த மர்ம நபர்கள், மூவாயிரத்து 500 ரூபாய் பணம் மற்றும் செல்போனையும் எடுத்துச் சென்றனர். கொள்ளையர்களை பிடிக்க முயன்ற நபர் ஒருவரும் தாக்குதலில் காயமடைந்தார். இந்த சம்பவத்தால் பள்ளியில் சிறுதுநேரம் பதற்றம் ஏற்பட்டது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version