குழந்தையின் தலை துண்டாகி வெளியே வந்த வினோத சம்பவம்!

தெலுங்கானாவின் நாகர்கர்னூலில் உள்ள அச்சாம்பேட் மருத்துவமனையில் ஒரு வினோதமான சம்பவம் நடந்துள்ளது.

அது, பிரசவத்தின்போது, தாயில் வயிற்றில் இருந்து குழந்தையின் தலை துண்டாகி வெளியே வந்துள்ளது. பிறகு அந்த குழந்தையின் உடலை அப்படியே பெண்ணின் கர்ப்பபையிலேயே விட்டுவிட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

நாடிம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சுவாதி. இவருக்கு வயது  23 .  இந்த பெண், ஹைதராபாத்தில் உள்ள பெட்லாபுர்ஜ் மகப்பேறு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். அதன் பிறகு தான் இந்த சம்பவம் வெளியே வந்தது. அங்குள்ள மருத்துவர்கள் குழந்தையின் உடலை மட்டுமே தாயின் வயிற்றில் கண்டுபிடித்தனர்.

இதனால், ஆத்திரம் அடைந்த உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு சம்பந்தப்பட்ட அச்சம்பேட்டை மருத்துவமனையை அடித்து சேதப்படுத்தினர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பேசும்போது, “எனக்கு ஒரு ஊசி போடப்பட்டது. பிரசவிக்க கஷ்டமாக இருந்தநிலையில், 2 ஆண் மருத்துவர்களை அழைத்து  வந்தனர். அதன் பிறகு என்னுடைய நிலைமையை எடுத்துக் கூறினார்கள். சிறிது நேரம் கழித்து உறவினர்களிடம் சிக்கலை கூறி, பெட்லாபுர்ஜில் உள்ள மகப்பேறு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுரை கூறினார்கள். பிரச்சனை என்ன என்பது குறித்தும், குழந்தையின் தலை துண்டிக்கப்பட்டது குறித்தும் எதுவும் மருத்துவர்கள் சொல்லவில்லை” என்றார்.

Exit mobile version