உதகையில் மலைவாழ் மக்களால் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்களின் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் உதகையில் கோடை சீசன் களை கட்டி உள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. அவர்களை கவரும் வண்ணம் மலைவாழ் மக்களால் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. மஹராஷ்டிரா, உத்தராஞ்சல், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட கைவினை பொருட்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இவற்றை பார்வையிடும் பொதுமக்கள், கைவினை பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.