தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடியும் வரை காவல்துறையினருக்கு விடுமுறை இல்லை என, டிஜிபி திரிபாதி அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் ஆயத்தப் பணிகள் முனைப்புடன் நடைபெற்று வரும் நிலையில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே காவல்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நிறைவடையும் வரை காவலர்களுக்கு விடுப்பு இல்லை என தமிழ்நாடு காவல்துறை டிஜிபி தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது சுற்றறிக்கையில் மிகவும் அவசிய தேவையின்றி காவல்துறையினருக்கு விடுப்பு வழங்கக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.